“மறுபடியுமா..?” இந்தியாவில் மீண்டும் புதிய வகை கொரோனா..!

இந்தியாவில் புதிய வகை கொரோனா உருவாகி இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. கொரோனா இரண்டாம் அலையின்போது அதிகமாக பரவிய நிலையில், கடந்த 3 மாதங்களாக கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது.

கொரோனா மூன்றாம் அலை செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் உருவாகும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பெரும்பாலான மக்கள் செலுத்திக்கொண்டதால் மூன்றாம் அலையின் தாக்கம் இல்லாமல் போனது.

இந்த நிலையில் மீண்டும் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக கொரோனா இந்தியாவில் ஏ ஒய் 4.2 கொரோனா வகை  (Covid variant AY.4.2) என்ற புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை 17 பேருக்கு இந்த ஏ ஒய் 4.2 வகை கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

Total
0
Shares

Comments are closed.

Related Posts