கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் விவரங்களை அறிந்தகொள்ள மத்திய அரசால் உருவாக்கப்பட்ட CoWIN செயலியில் பதிவு செய்த தனிநபர் விவரங்கள் டெலிகிராமில் கசிந்து வருவதாக கூறி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .
கொரோனா என்னும் கொடிய நோயை தடுப்பூசி மூலம் தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் நல்ல பலன் கொடுக்க அதனை 3 டோஸ்கள் வரை போட மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.அதன் படி தடுப்பூசி போட்டவர்க்ளின் விவரங்களை சேகரிக்க மற்றும் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழை பெறவும் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட செயலி தான் CoWIN.
இந்நிலையில் இந்த CoWIN செயலியில் பதிவு செய்திருந்தவர்களின் பெயர், பிறந்த தேதி, ஆதார், பாஸ்போர்ட், தொலைபேசி எண் போன்ற விவரங்கள் டெலிகிராமில் கசிந்து வருவதாக சில தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
அதிலும் குறிப்பாக சில முக்கிய அரசியல் பிரபலங்கள் பலரின், விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர் உதயநிதி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோரின் விவரங்களும் டெலிகிராமில் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது .
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் விசிக எம்.பி. ரவிக்குமாரும் கண்டம் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறிருப்பதாவது : தனிநபர் தரவுகளை மத்திய அரசு பாதுகாக்கத் தவறிவிட்டதாவும், இது ரயில் விபத்தைவிட மோசமானது எனவும் விசிக எம்.பி. ரவிகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.