கேரளாவில் (kerala)ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து காதலனைக் கொன்ற வழக்கில், கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட கிரீஷ்மாவுக்கு, கோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவு விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம்(kerala) மூறியன்கரை பகுதியை சேர்ந்த ஷாரோன்ராஜ் குமரி மாவட்டம் ராமவர்மன் சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில் ஷாரோன் ராஜ் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
மகனின் இறப்பில் சந்தேகமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு திருவனந்தபுரம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.இது தொடர்பாக காதலியான கிரீஷ்மாவிடம் விசாரணை மேற்கொண்ட போது 2 மாதங்களில் காதலன் ஷாரோன்ராஜ் 10 முறை கொல்ல முயன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
குறிப்பாக வீட்டில் பார்த்த இளைஞரை திருமணம் செய்து கொள்ளவும், தன்னுடைய ஜாகத்தில் முதல் கணவர் இறந்து விடுவார் என ஜோதிடர் கூறியதால் ஜூஸில் விஷம் கலந்து கொடுத்துள்ளார் என்பதும் அம்பலமானது.
இதையடுத்து கிரீஷ்மா, அவரது தாய், மாமா ஆகியோரை கேரள போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கிரீஷ்மாவுக்கு கேரள உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.