காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் காதல் சுகமல்லவா என்ற பாடலின் வரிகளுக்கு ஏற்ப காதலின் பிரிவைத் தாங்க முடியாமல் காதலியைப் பார்ப்பதற்காகக் காதலன் எடுத்த முடிவு வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து, அவரை அழைத்து சிலர் விசாரித்துள்ளனர்.
அப்போது, அவரது குரலும், அவரது பதிலும் அங்கே இருப்பவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, புர்காவை விலக்கி முகத்தை காட்டுமாறு அங்கே இருந்தவர்கள் கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு கூறியுள்ளார்.
இருப்பினும், அனைவரும் வற்புறுத்தியதால் வேறு வழியில்லாமல் தனது முகத்தை மறைத்து இருந்த புர்காவை அகற்றினார். அப்போதுதான் புர்காவிற்கு உள்ளே இருந்தது பெண் அல்ல ஆண் என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.இந்த நிலையில் உள்ளூர் மக்கள் விசாரித்ததை அடுத்து அவர் தனது காதல் விவகாரத்தைக் கூறியுள்ளார்.
பின்னர், ஊர் பொது மக்கள் அனைவரும் இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சையப் அலியை மீட்டுக் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்,மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் காதலன் மேற்கொண்ட இத்தகைய செயல் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.தற்பொழுது பர்தா அனைத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது