இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் முக்கிய தேர்வுகளில் ஒன்றாக பார்க்கப்படும் CUET தேர்வுமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீட் தேர்வு போன்று CUET- தேர்விலும் கடந்த ஆண்டு பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதாக புகார் எழுந்த நிலையில் நிபுணர்குழு பரிந்துரையைத் தொடர்ந்து CUET- தேர்வு நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக விளக்கம் தரப்பட்டுள்ளது.
Also Read : ட்ரெண்டிங்கில் ‘வீர தீர சூரன்’ படத்தின் டீசர்..!!
அதன்படி 2025ஆம் ஆண்டுக்கான CUET – தேர்வு ஆன்லைன் மூலமாகவே மட்டும் நடைபெறும் தேர்வுக்கான பாடங்கள் 63ல் இருந்து 37ஆக குறைக்கப்பட்டுள்ளன . மேலும் தேர்வுக்கான மொழிப்பாடங்கள் 33ல் இருந்து 13ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் ஆண்டு தோறும் தேர்வுகளில் எளிதாக குளறுபடிகள் நடைபெறுவது தொடர்கதையாகி வரும் நிலையில் இதற்கு இன்னும் தீர்வு கிடைக்காமல் இருப்பது முறையாக படித்து தேர்வை சந்திபர்வர்கள் மத்தியில் நம்பிக்கையை தளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது .