பொறியியில் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களில் மாற்றம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து படிப்படியாக கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்பட்டு அவர்களுக்கு நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் கல்லூரிகள் நவம்பர் 1ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், முதற்கட்டமாக முதலாமாண்டு மாணவர்களுக்கு மட்டும் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.