ஏராளமான ஊட்டச்சத்துக்களும், கனிமச்சத்துக்களும் நிறைந்துள்ள சீதாப் பழத்தின் (Custard Apple) வெளித்தோற்றம் வித்தியாசமாக இருந்தாலும்,
அதன் வெள்ளை நிற சதைப்பகுதி மிகவும் இனிப்பாக இருக்கும். இதில் ஒளிந்திருக்கும் ஆச்சர்யங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
சீத்தாப் பழம் Custard Apple உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும். இதில், உள்ள மெக்னீசியம் மாரடைப்பு ஏற்படாமல் நம்மை பாதுகாக்கும்.
இதையும் படிங்க : நிதிநிலை அறிக்கை 2024-25: தடைகள் பலவற்றையும் தாண்டி சாதனை படைக்கும் – முத்தரசன்!
இப்பழத்தில் குளுக்கோஸ் கணிசமாக உள்ளதால், இரத்த விருத்தி செய்து இரத்த சோகை நோயைக் குணப்படுத்தும். உடல் சோர்வை அகற்றி சுறுசுறுப்பை ஏற்படுத்தும். நினைவாற்றலை அதிகரிக்கும்.
இதில் வைட்டமின் பி வளமாக உள்ளதால் மூச்சுக்குழாய் அழற்சியைக் குறைக்கும் மற்றும் ஆஸ்துமா பிரச்சனை அண்டாமல் பாதுகாக்கும்.
ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளதால் கண் பார்வை திறனை அதிகரிக்கும்.
இதையும் படிங்க : TN Budget 2024-25 : மீள முடியாத கடன் வலையில் தமிழ்நாடு – அன்புமணி காட்டம்!
இதனை ஜூஸ் செய்து குடித்து வந்தால் சரும வறட்சி நீங்கி முகம் பளபளக்கும். சளி பிடிக்காது.
இந்த பழத்தின் சதைப் பகுதியை பிரித்தெடுத்து அதோடு சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வர, கொலஸ்ட்ரால் சேராமல் காக்கும். சீதாப்பழத்துடன், குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.
சீதாப்பழத்துடன், சிறிது வெள்ளைப் பூண்டு வைத்து மைய்யமாக அரைத்து, தேமல் மீது பூசி வர, தேமல் மறையும். சீதாப்பழச்சாறுடன், திராட்சைப் பழச்சாறு கலந்து, பருகி வர, நரம்புகள் வலுப்படும்.
இதையும் படிங்க : Gun Shot |காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல தமிழக அரசு முடிவு? – இது தான் காரணமா!
நீண்டகாலமாக அல்சர் நோயால் அவதிப்படுபவர்கள் சீதாப்பழம் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் குணமாகும்.
இது உடல் பருமனை தடுக்கும். புற்றுநோயை தடுப்பதற்கு தேவையான பண்புகள் இந்த சீதாபழத்தில் உள்ளன. செரிமானப் பிரச்சினைகள் இருப்பவர்கள் சீதாபழத்தை சாப்பிட்டால், அதில் இருந்து தீர்வு கிடைக்கும்.