சென்னை சேப்பாக்கத்தில் நியூசிலாந்து- வங்கதேசம் அணிகள் இன்று விளையாட உள்ள நிலையில் மெட்ரோ சேவை நீடிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது .
இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் நியூசிலாந்து – வங்கதேசம் அணிகள் விளையாடவுள்ள போட்டி, இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தமிழ்நாடு இரிக்கெட் சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது .அதன்படி, போட்டியினை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக, மெட்ரோ இரயில் சேவை வழக்கத்தை விடவும் கூடுதலாக ஒரு மணி நேரம்,வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ரசிகர்கள், போட்டிக்கான டிக்கெட்டினை காண்பித்து எவ்வித கட்டணமும் இன்றி மெட்ரோ இரயிலில் பயணம் மேற்கொள்ளலாம்.
போட்டியை காண மைதானத்திற்கு செல்லும் போது, இச்சலுகை பொருந்தாது என்பதனையும் மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துக் கொள்விறது. நீட்டிக்கப்பட்ட மெட்ரோ இரயில் சேவை பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையம் வரை இரயில்கள் இயக்கப்படும்.
புரட்சி தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்இரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பரங்கமலை மெட்ரோ இரயில் நிலையம் வரை 15 நிமிட இடைவெளியில் இரயில்கள் இயக்கப்படும். போட்டி நாளான இரன்டு (13.10.2023) இரவு 11.00 மணி முதல் -12.00 மணி வரை பச்சை வழித்தடத்தில் இருந்து நீல வழித்தடம் மாறுவதற்கான இரயில் சேவை இயக்கப்படாது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நேரில் கண்டுகளிக்க விரும்பும் ரசிகர்கள், இந்த வசதியை முறையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகறார்கள் என மெட்ரோ நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.