ஆப்பிள் நிறுவனம், இந்தியா மற்றும் 91 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள ஆப்பிள் ஐபோன் யூசர்களுக்கு ஏப்ரல் 11 ஆம் தேதி 12:30 மணிக்கு ஒரு புதிய ஸ்பைவேர் (Dangerous Spyware Apple warns iPhone users) தாக்குதல் அறிவிப்பைப் அனுப்பியுள்ளது.
அவர்கள் அனுப்பிய குறுஞ்செய்தியானது “உங்கள் ஆப்பிள் ஐடி-XXX-உடன் தொடர்புடைய ஐபோனை ரிமோட்டில் காம்ப்ராமைஸ் செய்ய முயற்சிக்கும் ஒரு மெர்ஸனரி ஸ்பைவேர் (mercenary spyware) மென்பொருள் தாக்குதலால் நீங்கள் டார்கெர்ட் செய்யப்படுவதை ஆப்பிள் நிறுவனம் கண்டறிந்தது”.
டெக் க்ரஞ்ச் அறிவிப்பின்படி, தாக்குதல் நடத்தியவர்களின் அடையாளங்கள் அல்லது யூசர்களின் அறிவிப்புகளைப் பெற்ற நாடுகளின் பெயர்கள் குறிப்பிடபடவில்லை.
இதுபோன்ற தாக்குதல்களைக் கண்டறியும் போது முழுமையான உறுதியை அடைவது ஒருபோதும் சாத்தியமில்லை என்றாலும், ஆப்பிள் நிறுவனம் இந்த எச்சரிக்கையில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளது.
எனவே, தயவுசெய்து அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு அறிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின்படி இந்த தாக்குதல் குறிப்பாக நீங்கள் யார் அல்லது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதன் காரணமாக உங்களை குறிவைக்கலாம்.
இது NSO குரூப்பின் பெகாசஸைப் போலவே ஆபத்தானது. பல நாடுகள் தேர்தலுக்குத் தயாராகி வரும் நேரத்தில் உளவு மென்பொருள் எச்சரிக்கைகள் வருகின்றன.
NSO குரூப்பிலிருந்து பெகாசஸைப்(Pegasus) பயன்படுத்துவது போன்ற மெர்ஸனரி ஸ்பைவேர் (Dangerous Spyware Apple warns iPhone users) மென்பொருள் தாக்குதல்கள், வழக்கமான சைபர் கிரிமினல் செயல்பாடு அல்லது யூசர் மல்வேர் விட அரிதானவை மற்றும் மிகவும் அதிநவீனமானவை.
கிரிமினல் செயல்பாடு அல்லது யூசர் மல்வேர் விட அரிதானவை மற்றும் மிகவும் அதிநவீனமானவை.
நாட்டில் பாதிக்கப்பட்ட ஐபோன் யூசர்களுக்கு சில முக்கியமான டிப்ஸ்களை அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட ஐபோன் யூசர்கள் உடனடியாக தங்கள் ஐபோன்களில் லாக்டவுன் மோடை (lockdown mode) இயக்கவும், சமீபத்திய iOS 17.4.1 பதிப்பிற்கு அப்டேட் செய்யவும் அறிவித்துள்ளது.
மேலும் டேமேஜ் அல்லது டேட்டா இழப்பைத் தவிர்க்க ஸ்ட்ரேன்ஜ்ர்களிடமிருந்து வரும் பொழுதுபோக்கு செய்திகள் மற்றும் இணைப்புகளைத் தவிர்க்குமாறு ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.