RN Ravi : அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் ஸ்வாமி கோயிலில் ஆளுநர் ரவி மற்றும் அவரது லக்ஷ்மி ரவி சாமி தரிசனம் செய்தனர்.
வானர குலத்தை சேர்ந்த அரசன் கேசரிக்கும் அரசி அஞ்சனைக்கும், மகனாக அவதரித்தவர் தான் அனுமன்.
இவர் மார்கழி மாதம் அமாவாசை திதியில், மூல நட்சத்திரத்தில் அவதரித்ததாக புராணங்கள் கூறப்படுகிறது.
அனுமன் பிறந்த நாளை அனுமன் ஜெயந்தியாக அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த நாளை இந்துக்கள் விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில்,அனுமன் ஜெயந்தி விழாவான இன்று உலகம் முழுவதும் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் புகழ் பெற்ற தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆஞ்சநேயர் சிலைக்கு 1 லட்சத்து எட்டு வடை மாலை சாத்தப்பட்டது.
நேற்று ஒரு டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று காலை ஒரு லட்சத்து எட்டு வடமாலை சாத்தப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனை அடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சென்னையில் இருக்கும் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் வடைமாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிப்பாடு நடத்தப்பட்டது.
பின்னர் மஞ்சள், சந்தனம், பன்னீர், தயிர், பால், தேன், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
Also Read :https://x.com/ITamilTVNews/status/1745371994521272583?s=20
இந்த நிலையில் ,அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் ஸ்வாமி கோயிலில் ஆளுநர் ரவி மற்றும் அவரது லக்ஷ்மி ரவி சாமி தரிசனம் செய்தனர்.
இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்..
ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி(rn ravi), திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள்,
ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் ஸ்வாமி கோயிலில் ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கி,
மக்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பெறவும், நமது மாநிலம் மற்றும் தேசம் அமைதியும் வளமும் பெறவும் பிரார்த்தனை செய்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.