நேபாளத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் எற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நேபாள நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது . இதன்காரணமாக நேபாளத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்து தண்ணீரில் மிதந்து வருகிறது.
Also Read : வங்கதேசத்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!!
விடாது பெய்த கனமழையால் ஏற்பட்டதில் வெள்ளத்தில் நேபாளத்தின் பெரும்பாலான பகுதிகளில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
3,000 பாதுகாப்புப் படை வீரர்கள் அடங்கிய குழுக்கள், மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் . 1000க்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில், 79 பேரை காணவில்லை எனவும் அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.