பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார் மற்றும் அவரது மகன் ரிச்சர்டு ஆகியோர் புதுச்சேரி டிஜிபி காலில் விழுந்து ஆசி பெற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் பாஜகவைச் சேர்ந்த ஜான்குமார் மற்றும் அவரது மகன் விவிலியன் ரிச்சர்டு ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
தீபாவளி பண்டிகை நேற்றைய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் பலரும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டனர.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார் மற்றும் அவரது மகன் விவிலியன் ரிச்சர்டு ஆகியோர் காவல்துறை டிஜிபி ரன்வீர்சிங் கிருஷ்ணியாவை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அப்போது, திடீரென சட்டமன்ற உறுப்பினர்களான ஜான்குமார் மற்றும் அவரது மகன் ரிச்சர்டு ஆகிய இருவரும் டிஜிபி காலில் விழுந்து ஆசி பெற்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
இந்நிலையில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் காவல்துறை டிஜிபி காலில் விழுந்து ஆசி பெற்றது பெற்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.