தீபாவளி கொண்டாட்டம் காரணமாக இரண்டே நாளில் டாஸ்மாக்கில் 431 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கரோனா பரவல் குறைவடைந்த நிலையில் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் இரண்டே நாட்களில் 431.03 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது.
தீபாவளிக்கு முந்தைய நாளில் 205.61 கோடி ரூபாய்க்கும், தீபாவளி தினத்தன்று மட்டும் 225.42 கோடி ரூபாய்க்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மதுரையில் 98.89 கோடி ரூபாய்க்கும், திருச்சியில் 89.95 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் 87.89 கோடி ரூபாய்க்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் ரூ.79.84 கோடிக்கும், கோவையில் ரூ.74.46 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.