Mallikarjun Kharge : வாக்குப்பதிவு புள்ளி விபரங்கள் அளிப்பதில் காலதாமதம் மற்றும் முரண்பாடுகள் ஏற்படுவதால், தேர்தல்களின் சுதந்திரமான மற்றும் நியாயமான தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்புகின்றன என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடக்கி 7 கட்டங்களாக நடந்து வருகிறது.
இதில் முதல்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதியும், 2-வது கட்ட தேர்தல் 26-ந் தேதியும் நடந்தது. இரண்டு கட்ட தேர்தலிலும் 190 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்து உள்ளது.
அடுத்ததாக இன்று (07.05.24) 3-வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க : May 7 Gold Rate : அதிகரிக்கும் தங்கம் விலை… நகை பிரியர்கள் ஷாக்!!
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
“இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை கவலை அளிக்கிறது. வாக்குப்பதிவு புள்ளி விபரங்கள் அளிப்பதில் காலதாமதம் மற்றும் முரண்பாடுகள் ஏற்படுவதால்,
தேர்தல்களின் சுதந்திரமான மற்றும் நியாயமான தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்புகின்றன.
இது சாதாரண தேர்தல் அல்ல, நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கான போராட்டம்.
தேர்தல் ஆணையத்தை பொறுப்புடன் நடத்துவதற்கும் குரல் எழுப்புவது நமது கூட்டு கடமையாகும்” எனத் தெரிவித்துள்ளார் Mallikarjun Kharge.
இதையும் படிங்க : +2 தேர்வு முடிவில் கடைசி 15 இடங்களில் டெல்டா மாவட்டங்கள்..- ராமதாஸ் வேதனை!