டெல்லியில் (delhi), பொதுமக்கள் நடமாட்டம் உள்ள தெருவில் 16 வயது சிறுமியை, 20 வயது இளைஞர் கொடூரமாக தாக்கி படுகொலை செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி (delhi) ரோகினி பகுதியில் நேற்று மாலை 16 வயதாகும் சாக்ஷி என்ற இளம்பெண், நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து சென்ற அவரது காதலன் சாஹல் 50 முறை சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்து உள்ளார்.
ஆனாலும், கோபம் அடங்காத அந்த இளைஞர் அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து பலமுறை அந்த பெண்ணின் மீது போட்டுள்ளார். இதனை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்தும் அந்த வாலிபரை நெருங்குவதற்கு பயந்து அந்தப் பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் யாரும் இறங்கவில்லை.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தற்போது, இந்த படுகொலை தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், இது குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த சாஹல் உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.