டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சமூக வலைதளங்கள் மூலமாக அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கு பரவத்தொடங்கிய கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவியது. இந்த வைரஸ் டெல்டா, டெல்டா பிளஸ் என உருமாற்றம் அடைந்து பாதிப்புக்களை ஏற்படுத்தியது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்று குறைவடைந்து, கடந்த 2 மாதங்களாக குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில் தற்போது, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், உருமாறிய கொரோனா வகையான ஒமைக்ரான் பரவல் இந்தியாவின் பல மாநிலங்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் வருகிறது. இதனை தொடர்ந்து கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்திய பல்வேறு மாநில அரசுகளும் கட்டுப்பாடுகளையும் அதிப்படுத்தி உள்ளது.
டெல்லியைப் பொறுத்தவரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,194 ஆக இருந்தது. முந்தைய சனிக்கிழமையை ஒப்பிடுகையில் இது 15% அதிகமாகும். டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை கொரோனாவால் மொத்தம் 25,109 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் திங்கட்கிழமையன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,000-த்தை தாண்டி உள்ளது.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சமூக வலைதளங்கள் மூலமாக அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.