பேருந்தில் இருந்து குதித்த மாணவி சிகிச்சை பலன் இன்றி மரணம்

Student-dies-after-jumping-off-bus-near-Hosur
Student-dies-after-jumping-off-bus-near-Hosur

ஒசூர் அடுத்த சினிகிரிப்பள்ளியை பேருந்தில் இருந்து குதித்த 12ஆம் வகுப்பு மாணவி மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சினிகிரிப்பள்ளியை சேர்ந்த முனிராஜ் என்பவரது மகள் நவ்யாஸ்ரீ கெலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

நேற்று மாலை கெலமங்கலத்திலிருந்து தருமபுரி செல்லக்கூடிய அரசு பேருந்தில் சினிகிரிப்பள்ளி கிராமத்திற்கு மாணவி நவ்யாஸ்ரீ வந்துள்ளார். பேருந்து சினிகிரிப்பள்ளி நிறுத்தத்தில் நிற்காமல் பல மீட்டர்கள் தூரம் சென்றதாக சொல்லப்படுகிறது.

தனது கிராமத்தில் பேருந்து நிற்காததால் மாணவி ஓடும் பேருந்திலிருந்து குதித்துள்ளார். மாணவி சாலையில் விழுந்ததில் பேருந்தின் பின்பக்க சக்ரரம் கை மற்றும் காலின் மீது ஏறி சென்றது. இதனை அடுத்து விபத்துக்குள்ளான மாணவி அதே பேருந்தில் உத்தனப்பள்ளி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். பின்னர், ஒசூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் அரசு பேருந்து ஓட்டுநர் வெங்கடேஷ் மற்றும் நடத்துனர் மீது உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Student dies after jumping off bus near Hosur

மேலும் சில ஓட்டுனர்கள் நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதிவேகத்தில் செல்வதால் இதுபோல விபத்துக்கள் ஏற்படுவதாகவும் கிராமப்புற மாணவ மாணவர்கள் பேருந்துகளை நம்பியே செல்கின்றனர்.
அவர்களை பாதுகாப்போடு அழைத்துச் செல்வது ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் கடமை. அதனை மீறுபவர்கள் மீது அதிகபட்ச நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Total
0
Shares
Related Posts