இறந்தபின்பும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள்..!

ஆடு மேய்க்கச் சென்ற 15 வயது சிறுமி ஒருவரை 3 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவத்தில், பல திடுக்கிடும் தகவல்கள் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளாது.

ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டத்தில், சக தோழியர் இருவருடன் ஆடு மேய்க்கச் சென்ற மலைவாழ் இனத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, சிறுநீர் கழிக்க மறைவாக சென்ற போது அவர் திடீரென மாயமானார். இது குறித்து பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட அவர்கள் தேடிய போது சிறுமி ரத்தம் தோய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி கொல்லப்பட்டது தெரியவந்தது. சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்த அதிர்ச்சி சம்பவத்தில் தொடர்புடைய சிறுவர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சிறுமியின் உடல்கூறாய்வு அறிக்கை தற்போது போலீசாருக்கு கிடைத்துள்ளது அதில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடையே பேசிய பண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெய் யாதவ் கூறியதாவது, “நான் இதுவரையில் இப்படியொரு மோசமான சம்பவத்தை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. மூன்று பேர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர். சிறுமியை அவரின் துப்பாட்டாவால் கட்டி வைத்து இந்த கொடூரத்தை நடத்தியிருக்கின்றனர்.

சிறுமியின் பிறப்புறுப்பில் 30க்கும் மேற்பட்ட காயங்கள் இருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மூன்று பேரின் வன்புணர்வு முயற்சியை எடுத்து அவர் போராடியிருக்கிறார். இருப்பினும் அவர்கள் சிறுமியை தாக்கியிருக்கின்றனர். அவரின் உடல் முழுதும் காயங்கள் இருந்தன. சிறுமி இறந்த பின்னரும் கூட குற்றவாளிகள் மூவரும் அவரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர்.

மிக மோசமான இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக யாரும் ஆஜராகப்போவதில்லை என பண்டி மாவட்ட வழக்கறிஞர் சங்கமும் முடிவெடுத்துள்ளது” என மாவட்ட எஸ்.பி தெரிவித்தார்.

பிரேதப் பரிசோதனையில் இடம்பெற்றிருந்த தகவல்கள் சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தை விவரிப்பதாக இருந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Total
0
Shares
Related Posts