Delhi Cold-தென்மேற்கு டெல்லியின் எல்லையோரத்தில் அமைந்துள்ள அயா நகரில் இன்று காலை 1.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது.
டெல்லியில் இந்த ஆண்டு குளிர்நிலை, ஏற்றத்தாழ்வுடன் இருந்து வருகிறது. சில நாட்கள் குறைந்தபட்ச வெப்பநிலை 7 அல்லது 8 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும், அடுத்த சில நாட்கள் அதைவிட குறைந்துவிடும்.
வழக்கமாக ஆண்டுதோறும் இத்தகைய காலக்கட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் நிலையில் இந்த ஆண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை குறைந்தபட்ச வெப்பநிலை 3.9 டிகிரியாக பதிவு ஆனது. இது டெல்லி மக்களை குளிரில் நடு நடுங்க வைத்துவிட்டது.
இன்று (ஜனவரி 6 ஆம் தேதி) காலை 1.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவாகி குளிர் வாட்டி வதைத்து வருகிறது. அதிகாலை வேலைக்குச் செல்வோருக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
Also Read:https://itamiltv.com/ayodhya-ram-temple-inauguration-chhattisgarh-govt-announces-free-train-scheme/
இந்த நிலையில் தென்மேற்கு டெல்லியின் எல்லையோரத்தில் அமைந்துள்ள அயா நகரில் இன்று காலை 1.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குளிர் காலம் அதன் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் டெல்லியிலும் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
அதிகாலைப்பொழுதில் சாலைகளை மறைக்கும் அளவுக்கு பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், டெல்லிவாசிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
சஃப்தர்ஜங்கில் 4.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தேசிய தலைநகரில் நிலவும் குளிர் அலையில் இருந்து விடுபடுவதற்காக டெல்லி மக்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர்.
Also Read:https://x.com/ITamilTVNews/status/1745794464348811645?s=20
நள்ளிரவுக்கு பிறகு திடீரென குளிர் அதிகரித்தது பலருக்கு தூக்கத்தை தொலைத்தது.
காலை விடியும்போது எங்கு பார்த்தாலும் ஒரே பனிமூட்டமாக தெரிந்தது. இதனால் பார்வைத்திறனின் தூரம் குறைந்தது. இது போக்குவரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
மேலும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில், ஜி.டி. ரெயில் உள்பட 23 ரெயில்கள் டெல்லிக்கு தாமதமாக வந்தன.
இதேப்போல் விமான போக்குவரத்திலும் ஒரு மணிநேரம் முதல் 4 மணிநேரம் வரை தாமதம் ஆனது.நகரில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 18.1 டிகிரியாக இருந்தது.
இந்த நிலையில் டெல்லியில்( Delhi Cold) அதிகரித்து வரும் குளிர் அலை காரணமாக, வீடற்ற மக்களுக்காக தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளன.