டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை மோசடி வழக்கில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2021-22 ஆம் ஆண்டுக்கான டெல்லி மதுபான கொள்கையில் (கலால் கொள்கை) தனியாருக்கு மதுபான கடைகள் ஒதுக்கீடு செய்வதில் மோசடி நடந்ததாக அம்மாநில ஆளுநர் சக்சேனா குற்றம்சாட்டினார்.
இதன் அடிப்படையில் சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டன. இதனால் டெல்லி அரசு புதிய மதுபான கொள்கையை வாபஸ் பெற்றது. இந்த வழக்கில் பல்வேறு தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.
தற்போது வரையிலும் அவருக்கு ஜாமீன் தரப்படவில்லை. இந்த விவகாரத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலிடமும் சிபிஐ விசாரணை நடத்தி உள்ளது.இந்த நிலையில், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் எம்பி சஞ்சய் சிங் பெயரும் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து டெல்லியில் 100க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி கட்சியினர் டிடியு மார்க்கில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகம் அருகே, ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதோடு, சஞ்சய் சிங்கை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவதிற்க்கு டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் சிங் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், இது சட்டவிரோதமானது என்றும் அதானி குழுமத்தின் செயல்களை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தியதற்காக அமலாக்க இயக்குனரகம் (ED) எம்பி சஞ்சய் சிங்கை குறிவைத்ததாக தெரிவித்த தெரிவித்தார்.
மேலும் மோடியின் பதற்றத்தை காட்டுகிறது என்றும் கூறினார். தேர்தலுக்கு முன் மேலும் பல எதிர்க்கட்சி தலைவர்களை பாஜக கைது செய்யும் என்று எச்சரித்தார்.