இன்று நாடு முழுவதும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ரக்ஷா பந்தன் என்பதன் பொருள் பாதுகாப்பான பந்தம். சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களைக் காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வுக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் அவர்களது மணிக்கட்டில் ஒரு புனித கயிறு கட்டுவர்.
மேலும் இந்த நாளில், பெண்கள் புதிய ஆடைகள் அணிந்து, தமது சகோதரர்களின் மணிக்கட்டில் ராக்கி கட்டும் வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பார்கள்.
அதன் பின்னர் தங்கள் சகோதரர்களின் நெற்றியில் சிகப்பு குங்குமம் வைத்து, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி அதன் பின்பு மணிக்கட்டில் ராக்கி என்னும் புனிதக் கயிற்றைக் கட்டுவார்கள்.
பதிலுக்கு சகோதரர்கள், தங்கள் அன்பை தெரிவிக்கும் விதமாக தங்கள் சகோதரிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்குவார்கள்.
இந்நிலையில், இன்று ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்த பின்னர், டெல்லியில் பள்ளிக் குழந்தைகளுடன் ரக்சா பந்தன் கொண்டாடினார். அப்போது பள்ளி குழந்தைகள் பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி மகிழ்ந்தனர்.