டெல்லியில் (Delhi) கடந்த 26 ஆம் தேதி குடியரசு தின விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு 3 வது பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15, 1947 இல் இந்தியா ஒரு சுதந்திர நாடாக மாறினாலும், ஜனவரி 26, 1950 அன்று அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதன் மூலம் அது தன்னை இறையாண்மை, ஜனநாயக மற்றும் குடியரசு நாடாக அறிவித்தது.
அதன் பிறகு ஜனவரி 26 ஆம் தேதி, தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டு இந்திய குடியரசு தினமாக அங்கீகரிக்கப்பட்டது.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் குடியரசு தின விழா கடந்த ஜனவரி 26 ஆம் தேதி டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் நடைபெற்றது.
குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என் ரவி தேசிய கோடியை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் திட்டங்களை விளக்கும் வகையில் வாகன ஊர்தி நடைபெற்றது.
அதே போல் டெல்லியில் (Delhi) நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்து, ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் இதில் பங்கேற்றனர். இந்த விழாவில் ராணுவத்தின் பிரமாண்ட வாகனங்கள், ராணுவத்தின் அணிவகுப்புகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து அரசுத் துறைகளின் நலத்திட்டங்கள், சாதனைகளை எடுத்துரைக்கும் விதமாக பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்திகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
இதில் தமிழ்நாடு உள்பட 16 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. இதில், குடவோலை முறையின் சிறப்பை விளக்கும் வகையில் தமிழ்நாடு ஊர்தி அலங்கரிக்கப்பட்டு இருந்து.
பழந்தமிழ் நாட்டின் குடவோலை முறை – மக்களாட்சியின் தாய்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில், 10ம் நூற்றாண்டு சோழர் காலக் குடவோலை முறையை மையப்படுத்தி ஊர்தி உருவாக்கப்பட்டது.
https://x.com/ITamilTVNews/status/1752198242220302797?s=20
இந்த ஊர்திக்கு நடுவர்கள் குழு 3 ஆவது பரிசு அறிவித்துள்ளளனர்.
இதே போன்று, குடிசை தொழிலில் பெண்களின் முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஓடிசாவின் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
எல்லைப்பகுதி சுற்றுலாவை பிரதிபலித்த குஜராத்தின் அலங்கார ஊர்திக்கு 2 ஆவது பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் அலங்கார வாகனம் இடம்பிடிக்காமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் , கடந்தாண்டு மகளிரை முன்னிலைப்படுத்தி அலங்கார ஊர்தி இடம்பிடித்திருந்தது.
இதையும் படிங்க : kilambakkam பேருந்து நிலையம்: முழுமையாக பயன்பாட்டிற்கு வந்தது
இந்த முறை குடவோலை முறையை மையப்படுத்தி, பங்கேற்ற தமிழ்நாட்டு வாகனம் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தது.
இதேபோல் மக்கள் தேர்வின் அடிப்படையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், குஜராத்திற்கு முதலிடமும், உத்தரப் பிரதேசத்திற்கு இரண்டாவது மற்றும் ஆந்திராவிற்கு 3 ஆவது இடங்களும் கிடைத்தன.