சதுரகிரி (Saduragiri) மலைப்பகுதியில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பகதர்கள் செல்ல வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு ஏரளாமான பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவது வழக்கம்.
அந்தவகையில் தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வரும் 23 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர்.
பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை வழியாக மட்டுமே சென்று வர வேண்டும் எனவும் இரவில் பக்தர்கள் தங்குவதற்கும், ஆற்று பகுதிகளில் இறங்கி குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.
(Saduragiri) வனத்துறையினர் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மலை ஏற அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்து ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் உடனடியாக தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.
சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் தற்போது செய்து வருகின்றனர்.
மலை ஏற வரும் பக்கதர்களுக்கு பாதுகாப்பாக ஆங்காங்கே வனத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வந்ததால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வந்ததன் காரணமாக கடந்த சில நாட்களாக சதுரகிரி மலையேறத் தடை விதிக்கப்பட்டிருந்தது .
Also Read : https://itamiltv.com/pm-in-tn-strict-restrictions-in-rameswaram/
பிரதோஷம், பவுர்ணமியை ஒட்டி சதுரகிரி கோயிலுக்குச் செல்ல வழங்கப்பட்டிருந்த அனுமதியை வனத்துறை ரத்து செய்ததது .
இந்நிலையில் தற்போது நீண்ட நாட்களுக்கு பின் சதுரகிரி மலைப்பகுதியில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பகதர்கள் செல்ல வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர்.