நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இந்த படத்துக்கு நானே வருவேன் என தலைப்பு வைத்துள்ளனர்.
இந்த படத்தில் வில்லனாக செல்வராகவனே நடிக்கிறார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கும் சாணிக் காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் செல்வராகவன் நடித்து வருகிறார்.இதையடுத்து மோகன்.ஜி இயக்கும் படத்திலும் அவர் நடிக்கிறார்.
இந்நிலையில் தனது தம்பியான தனுஷ் படத்தில் அவர் வில்லன் வேடம் ஏற்றுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. ஹீரோயினாக இந்துஜா நடிக்கிறார்.