“டி 20 உலகக்கோப்பை போட்டிக்கு தல வராரு”.. – குஷியான விராட் கோலி

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு இந்திய அணிக்கு ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டிருப்பது அணியில் உள்ள வீரர்களின் நம்பிக்கைக்கு ஊக்கம் அளிக்கும் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் முறைப்படி இன்று தொடங்கி, நவம்பர் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 24ம் தேதி நடைபெற உள்ள முதல் பிரதானச் சுற்றில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற தோனி, டி20 உலகக் கோப்பைப் போட்டிக்காக மட்டும் இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஐசிசி சார்பில் கேப்டன்களுக்கான நேர்காணலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டி அளித்தார். அதில் மிகப்பெரிய அனுபவம் தான் தோனி என்றும் எங்கள் அணிக்குள் மீண்டும் தோனி வருவதே மிகப்பெரிய உற்சாகத்தை அளிக்கும். இந்த உலகக் கோப்ைபக்கு மட்டுமல்ல எப்போதுமே தோனி எங்களுக்கு ஆலோசகர்தான் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் இந்திய அணிக்குள் வந்ததில் இருந்து, இப்போதுவரை தோனி தனக்கு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் எங்களுக்கு ஆலோசகராகவே இருந்து வருகிறார் என்று தெரிவித்த விராத் கோலி, குறிப்பாக இளம் வீரர்கள், கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருப்போருக்கு, தோனியுடன் கலந்துரையாடல் செய்து தங்களை வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தோனி அணிக்குள் வருவது உண்மையில் வீரர்களுக்கும், சூழலுக்கும் உற்சாகத்தையும் அணி வீரர்களின் நம்பிக்கைக்கு உண்மையில் மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்றும் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

Total
0
Shares
Related Posts