சுவிட்சர்லாந்தில் நடைபெறும் டைமண்ட் லீக் தடகள போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் தங்கமகனான நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
நட்சத்திர வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்ளும் டைமண்ட் லீக் தடகள போட்டி சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது .

உலக நாடுகள் உற்றுநோக்கும் இந்த பிரம்மாண்ட தொடரில் கடந்த வாரம் ஹங்கேரி நாட்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்தியாவின் தங்கமகனான வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.

ஒலிம்பிக் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் என ஜாம்பவான்கள் பங்கேற்கும் இரண்டு தொடரிலும் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற 3-வது வீரர் என்ற சரித்திரம் படைத்த நீரஜ் சோப்ரா நேற்று நடைபெற்ற இந்த டைமண்ட் லீக் தடகள போட்டியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார் .

இதற்கு முன் தோகா நாட்டில் நடைபெற்ற டைமண்ட் லீக், லாசானே டைமண்ட் லீக் லிம்பிக் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் உள்ளிட்ட போட்டிகளில் தங்க பதக்கம் வென்று வெற்றி வாகை சூடிய நீரஜ் சோப்ரா இந்த தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது பலருக்கு ஏமாற்றம் அளித்தாலும் நீரஜ் சோப்ரா பதக்க வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.