இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் (Director Arunraja Kamaraj) விஷ்ணு விஷால் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கியவர் நடிகர் விஷ்ணு விஷால்.
இதனைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை, ராட்சசன் முண்டாசுப்பட்டி, ஜீவா, கட்டா குஸ்தி என அடுத்தடுத்த சிறப்பான படங்களில் நடித்து கோலிவுட்டில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளார்.
இவர் சினிமாவில் என்ட்ரியாகி 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இந்த நிலையில் சூப்பரஸ்டார் ரஜினியுடன் இணைந்து விஷ்ணு விஷால் நடித்துள்ள லால் சலாம் விரைவில் வெளிவரவுள்ளது.
இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன் (Vishnu vishal) விக்ராந்த் லீட் கேரக்டரில் நடித்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியானது.
இந்த திரைப் படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Police Transfer: சென்னையில் 122 காவல் ஆய்வாளர்கள் டிரான்ஸ்ஃபர்
இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘கனா’, ‘நெஞ்சுக்கு நீதி’ படங்களின் மூலம் கவனம் இயக்குநராக கவனம் பெற்றவர் அருண்ராஜா காமராஜ் (Director Arunraja Kamaraj).
இவர் இயக்கத்தில் லேபில்’ வெப் சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாஸ்டார் ஓடிடியில் அண்மையில் வெளியானது.
இதனைத் தொடர்ந்து அவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் விஷ்ணு விஷால். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் மற்ற விவரங்கள் எதையும் படக்குழு வெளியிடவில்லை.
விஷ்ணு விஷாலை இயக்குநர் கோகுலுடன் ஒரு படம் நடிக்கிறார். தொடர்ந்து ‘கட்டா குஸ்தி’ இயக்குநர் செல்லா அய்யா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
https://x.com/ITamilTVNews/status/1754760649731948912?s=20
இந்த இரண்டு படங்களையும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. தற்போது அருண் ராஜா காமராஜுடன் இணைந்துள்ளார்.
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உடனான அவரது கூட்டணி அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.