“எனது மனைவிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” என இயக்குநர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி வந்த விக்ரமன் புதுவசந்தம் என்ற படத்தை இயக்கி புகழின் உச்சிக்கு சென்றார்.முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பூவே உனக்காக, சூர்யவம்சம், வானத்தைப் போல, பிரியமான தோழி என பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த விக்ரமன் பேட்டியில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக தனது மனைவி கடந்த 5 ஆண்டுகளாக படுத்த படுக்கையில் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

இந்த சம்பவத்தை அறிந்த முதலமைச்சர் முக ஸ்டாலின் சுகாதாரத்துறை அமைச்சர் மாசுப்ரமணியிடம் தேவையான சிகிச்சை நடவடிக்கை செய்து தர உத்தரவிட்டு இருந்தார்.
அந்த வகையில் இன்று இயக்குநர் விக்ரமன் வீட்டிற்கு சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் மாசுப்ரமணியன் மற்றும் 20க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்களை அழைத்து தனது மனைவியை பரிசோதித்தனர்.பின்னர் சிறப்பான சிகிச்சை அளித்து குணமடையச் செய்கிறோம் என உறுதியளித்தனர்.
மேலும் முதல்வரின் இந்த செயலுக்கு செய்தியாளர்களை சந்தித்து இயக்குநர் விக்ரமன் நன்றி தெரிவித்துள்ளார்.