7.5% உள் ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை – கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து” – DOTE எச்சரிக்கை..!

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொறியியல் படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்றும் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே கட்டணம் வசூலித்திருந்தால், அவற்றை மாணவர்களிடம் உடனடியாக திருப்பி வழங்க வேண்டும் எனவும் பொறியியல் கல்லூரிகளுக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்கம் அறிவுறுத்தியுள்ளது.

Total
0
Shares
Related Posts