வாட்ஸ்அப் செயலியின் முடக்கத்தால் 70 மில்லியன் யூசர்கள் டெலிகிராம் செயலிக்கு மாறி இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் கடந்த திங்கட்கிழமை இரவு ஒரே நேரத்தில் திடீரென முடங்கின.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆப்ஸ்கள் திடீரென முடங்கியதால் பயனாளர்கள் பெரும் அவதி உற்றனர்.
சுமார் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் ஆப்ஸ்களின் செயல்பாடு இயல்பு நிலைக்கு திரும்பியது. யூசர்கள் எதிர்கொண்ட இந்த திடீர் பிரச்சனைக்கு விளக்கம் அளித்த பேஸ்புக் நிறுவனம், தொழில்நுட்ப பிரச்சனையால் செயலிகள் முடங்கியதாக விளக்கம் அளித்தது.
இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியின் சில மணிநேர முடக்கம், டெலிகிராம் செயலியின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளதுவாட்ஸ்அப் செயலியின் முடக்கத்திற்கு பின்பு 70 மில்லியன் புது யூசர்கள் கிடைத்திருப்பதாக டெலிகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் பேசும்போது, கடந்த 24 மணி நேரத்தில் டெலிகிராம் செயலியின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்க்காத வகையில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் சுமார் 70 மில்லியன் புது யூசர்கள் டெலிகிராமுக்கு கிடைத்துள்ளனர். அவர்களின் வருகையை தாங்கள் முழுமனதோடு வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.