nivetha pethuraj : தன்னைப் பற்றி தவறாக பரவும் தகவல்களுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் உருக்கமான விளக்கத்தை கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை நிவேதா பெத்துராஜ் . ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், பொதுவாக என் மனசு தங்கம் உட்பட இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நிவேதா நடித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட நிவேதா, பள்ளி படிப்பை அங்கு முடித்துவிட்டு தந்தையின் வியாபாரம் நிமித்தமாக துபாயில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வெளிநாட்டில் ஜுலியாக இருப்பதாகவும் இவர் பணத்தை தாராளமாக செலவு செய்து வருவதாகவும் பல அவதூறு கருத்துக்கள் இணையத்தில் பரவி வந்தது.
இந்நிலையில் தன்னைப் பற்றி பரப்பப்படும் அவதூறுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. கடந்த சில நாட்களாக தானும், தனது குடும்பமும் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக நடிகை நிவேதா உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
மேலும் தான் சினிமாவில் வாய்ப்பு தரும்படி (nivetha pethuraj) எந்த தயாரிப்பாளரையோ, நடிகரையோ எப்போதும் தொடர்பு கொண்டதே இல்லை. தனக்கு வரும் வாய்ப்புகளில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதாகவும் நடிகை நிவேதா தெரிவித்துள்ளார். .