நடிகர் விஜய் தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம் தொடர்ந்து செயல்படும் என்றும் நடிகர் விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய புகைப்படத்தையும், பெயரையும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்டோர் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கினை அடுத்து விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் விஜய் தலைமையில் உள்ள மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்தன. இதனை அடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர் உருவாக்கிய விஜய் மக்கள் இயக்கம் தான் கலைக்கப்பட்டுள்ளது என்றும் நடிகர் விஜய் தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் நடிகர் விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.