14 வயது சிறுமிக்கு நடந்தது என்ன? – தாய் உட்பட இருவர் மீது பாய்ந்தது போக்சோ

Three-people-including-a-mother have-been-arrested-in-Pokso
Three people including a mother have been arrested in Pokso

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள திருமலை கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் 35 வயதான மணிகண்டன். இவர் விவசாயம் செய்து வருகிறார். விவசாயி மணிகண்டனுக்கும் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த சேகர்- சுந்தரி தம்பதியினரின் 14 வயது மகளுக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் குழந்தை திருமணம் நடைபெற்றதாக திருவண்ணாமலை சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. இத்தனை அடுத்து திருவண்ணாமலை சமூக நலத்துறை அதிகாரிகள் திருமலை கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்யபட்டதை உறுதி செய்த சமூகநலத் துறை அதிகாரிகள், ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Three-people-including-a-mother have-been-arrested-in-Pokso
Three people including a mother have been arrested in Pokso

புகாரின் அடிப்படையில் சிறுமியை திருமணம் செய்த மணிகண்டன், சிறுமியின் தந்தை சேகர் மற்றும் தாய் சுந்தரி ஆகிய 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர், அவர்களை ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Total
0
Shares
Related Posts