தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச் சாராயத்தால் 23 பேர் உயிரிழப்பு,போதைப் பொருட்கள்,கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்தத் தவறிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்திவிருதுநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் விடியா திமுக அரசை கண்டித்து இன்று காலை 10:30 மணி அளவில் நரிக்குடி பஸ் நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்பாட்டத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருமிகு. R.K.ரவிச்சந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார்.நரிக்குடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. பூமிநாதன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.சிவசாமி, காரியாபட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ராம்மூர்த்திராஜ், தலைமை கழக பேச்சாளர் சம்ஸ்கனி கண்டன உரை ஆற்றினார்கள்.
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில/ மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய/ நகர/பேரூர் கழக செயலாளர்கள் (ம) நிர்வாகிகள்,மாவட்ட பிற அணி செயலாளர்கள், மற்றும் பிற அணி நிர்வாகிகள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள்,
நகரமன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கிளை கழக செயலாளர்கள், வார்டு கழக செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்,கழகத் தோழர்கள், இந்த இயக்கத்தின் ஆணி வேராக இருக்கின்ற தொண்டர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.