சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்ற திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு உலக சாதனை (World Record) புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில மாதங்களாக திமுக இளைஞரணி 2வது மாநில மாநாட்டிற்காக ஆயத்தமாகி வந்த நிலையில், சுமார் 16 ஆண்டுகளுக்குப் நேற்று மிக பெரிய அளவில் பிரம்மாண்டமாக அந்த மாநாடு நடைபெற்றது .
கடந்த 17-12-2023 அன்று ‘தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு’ சேலத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது .
ஆனால் மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பு காரணமாக திமுக இளைஞரணி நாட்டின் தேதி மாற்றப்பட்டு டிச. 24-க்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தென் மாவட்டங்களில் பெய்து வந்த வரலாறு காணாத மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட நிலையில் திமுக இளைஞரணி மாநாடு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது .
பலமுறை ஒத்திவைக்கப்பட்ட பல தடைகளை கடந்து இந்த மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது .
இந்த மாபெரும் மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க . திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கொடியேற்றி வைத்தார்.
இந்தமாநாட்டில் மாநில உரிமைகள் பறிப்பு, நீட் விலக்கு உள்ளிட்ட 22 தலைப்புகளில் சிறப்பு அழைப்பாளர்கள் உரையாற்ற
மாநாட்டின் நிறைவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் சிறப்பு உரையாற்றினார்.
இதுமட்டுமின்றி இந்த மாநாட்டில் 20 கும் மேற்பட்ட தீர்மானங்களும் நிறைவேற்ற பட்டன.
பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த மாநாட்டிற்காக சிறப்பு ரயில் இயக்கப்பட்ட நிலையில், அதில் ஏராளமான தொண்டர்கள் வந்து மாநாட்டில் பங்கேற்றனர் .
சேலத்தில் திமுக இளைஞரணி மாநாட்டையொட்டி 8,000 போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .
அச்சம்பவத்திகள் எதுவும் நடைபெறாமல் இருக்க உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று கோலாகலமாக நடைபெற்ற திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : https://itamiltv.com/vanathi-compared-pmoindia-with-raja-raja-cholan/
திமுக இளைஞரணி மாநாட்டுக்காக சேலத்தில் அமைக்கப்பட்ட அரங்கம், உலகின் ‘மிகப்பெரிய தற்காலிக மாநாட்டு அரங்கம்’ என்ற Unique World Record புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
9.50 லட்சம் சதுர அடி பரப்பளவில், 45 நாட்களில் இந்த மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.