தொகுதி நிர்வாகிகளின் தேர்தல் பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு குழுவிடம் (DMK Coordinating Committee) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் அனல் பறக்கும் பேச்சுவார்த்தை நடத்தவும், தொகுதி பங்கீடுகள் குறித்து தெளிவாக பேசவும்
மக்களுக்கு தேவையான சரியான தேர்தல் அறிக்கை தயார் செய்யவும் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 3 முக்கிய குழுக்களை அமைத்து உள்ளார்.
தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு
உதயநிதி ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு தமிழக முதல்வரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் (DMK Coordinating Committee) ஸ்பெயினில் இருந்து காணொலி மூலம் தீவிர ஆலோசனை மேற்கொண்டார் .
இதில் தொகுதி நிர்வாகிகளின் கருத்து, தேர்தல் பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைவரிடமும் கேட்டறிந்தார்.
சில மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்று
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இதுவரை நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் குறித்து உரையாற்றினர் .
இதுமட்டுமின்றி இன்று நடைபெற்ற கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மண்டல மாநாட்டில் தீர்மானங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் சில செய்திகளை பகிர்ந்துள்ளார்.
கொங்கு மண்டல எழுச்சி மாநாட்டின் வெற்றி கொங்கு மண்டலத்தில் எழுச்சியை உண்டாக்கட்டும். வாருங்கள் கைகோத்து களத்தில் போராடுவோம்.
கொங்கு மண்டலத்தோடு சேர்த்து தமிழ்நாட்டையும் முன்னேற்றுவோம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 என்ற இலக்கை அடைய போராட்டத்தைத் தொடங்குவோம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிற இந்த நேரத்தில் நம் கவனத்தையும் இலக்கையும் திசைதிருப்ப பல்வேறு முயற்சிகள் நடக்கலாம்.
Also Read : https://itamiltv.com/people-who-hangs-on-stairs-in-city-bus-is-punished-soon/
அதையெல்லாம் கடந்து அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று நாட்டைக் காப்பாற்றுவது நம்முடைய கடமை.
அதற்கு அன்புச் சகோதரர் ஈஸ்வரன் தலைமையிலான கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநாடு துணை நிற்கட்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.