Udhayanidhi-மதத்திற்கோ நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை; ராமர் கோயில் வந்தது பிரச்சனை இல்லை,
அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால்தான் அதில் திமுகாவிற்கு உடன்பாடு இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக இளைஞரணியின் 2 வது மாநில மாநாடு வரும் 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளதை ஒட்டி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,
சென்னை அண்ணா சாலை சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலையில் இருந்து சுடர் ஓட்டத்தை துவங்கி வைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,இந்த சுடர் ஓட்டத்திற்காக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,
முத்தமிழ் கலைஞர் சிலைகளுக்கு நம்முடைய வீரவணக்கத்தை செலுத்தி இந்த சுடர் ஓட்டத்தை இங்கிருந்து தொடங்கி வைத்துள்ளேன்.
இன்று தொடங்கி அடுத்த இரண்டு நாட்களுக்கு சேலம்வரை சுமார் 310 கிலோ மீட்டர் இந்த சுடர் கொண்டு செல்லப்படுகிறது.
இதையும் படிங்க :https://itamiltv.com/pm-modi-visit-chennai-5-layers-security-arrangements-22-000-police-officers/
இரண்டு முறை இந்த மாநாடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது.
தலைவர் இளைஞர் அணிக்கு கொடுத்திருக்கக் கூடிய மிகப்பெரிய சவால் இந்த மாநாடு. இதை நாம் நிறைவேற்றிக் காட்ட வேண்டும்.
கடந்த 9 ஆண்டுகளாக மாநில உரிமைகளை அ.தி.மு.க. ஆட்சியில் நாம் முழுமையாக கல்வி உரிமை, நிதி உரிமை அனைத்தையும் நாம் இழந்துள்ளோம்.
இவை அனைத்தையும் நாம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதுவரை இந்திய அளவில் இதுபோன்ற மாநாடு நடத்தப்படவில்லை.
குடும்பத்தோடு இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். இனி இந்திய வரலாற்றில் இது போன்ற மாநாடு நடத்த முடியாது என காண்பிக்க வேண்டும்.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1747866068528579056?s=20
கூடி கலைந்த கூட்டம் அல்ல , .கொள்ளை கூட்டம் என்பதை நிரூபுக்க வேண்டும் என்றார்இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
தமிழகத்தில் இரண்டு பேரிடர் ஏற்பட்டதின் காரணமாக இரு முறை தள்ளி வைக்கப்பட்ட திமுக இளைஞர் அணி மாநில மாநாடு வரும் 21 ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. 3 முதல் 4 லட்சம் இளைஞர் அணியினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
தற்போது ஏற்றப்பட்ட சுடர் திமுக தலைவரிடம் மாநாட்டின் போது ஒப்படைக்க உள்ளோம்.
இரு சக்கர வாகன பேரணி,
புகைப்பட கண்காட்சி, பேச்சாளர்கள் உரை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் ,ராமர் கோயில் திறப்பு குறித்து செய்தியாளர் கேள்விக்கு, ஏற்கனவே கலைஞர் சொன்னது போல மதத்திற்கோ நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை ராமர் கோயில் வந்தது பிரச்சனை அல்ல..
அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால்தான் அதில் திமுகாவிற்கு உடன்பாடு இல்லை என தெரிவித்தார்.
திமுக பொருளாளர் கூறியதை போல ஆன்மீகத்தையும் அரசியலையும் ஒன்றாக்க வேண்டும் எனவும் உதயநிதி (Udhayanidhi) கூறினார்.