மும்பையில்(Mumbai) நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்(mk stalin) செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில்(Mumbai) 2024 லோக்சபா தேர்தல் வெற்றி குறித்தும் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ள ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின், மல்லிகார்ஜுனா கார்கே, மம்தா பானர்ஜி , உத்தவ் தாக்கரே, நித்திஷ் குமார், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு தேர்தலில் முடிந்தவரை ஒன்றாக போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் தொகுதி பங்கீடு தொடங்குவது, மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடந்து என்று முடிவு செய்யப்பட்டது.
பின்னர் இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள்சந்திப்பு நடைபெற்றது. அப்போது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தமிழிலேயே கலந்துரையாடினர்.
அப்போது பேசிய முதல்வர் , ” இந்தியா கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் போன்று பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அதற்கு தமது நன்றியை தெரிவிப்பதாக கூறினார். இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வளர்ந்து வருவதாக தெரிவித்த அவர், இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து வருவதாகவும் தெரிவித்தார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.