தமிழ் சினிமாவில் தற்போது சாக்லேட் பாயாக வலம் வரும் நடிகர் அசோக் செல்வன் சுப்ரிம் ஸ்டார் சரத்குமாருடன் கைகோர்த்து இவர்களது நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் போர் தொழில். இப்படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார் .
சரத்பாபு மற்றும் நிகிலா விமல் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் மக்களின் அமோக வரவேப்பை பெற்று திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது .
காட்சிக்கு காட்சி திரில்லரில் மிரள வைக்கும் இப்படத்தின் ஒவ்வரு அசைவுகளும் பார்க்க பார்க்க இருக்கையின் முன் பதற்றத்துடன் அமரவைத்துள்ளது . இதற்கு முன் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியன் ராட்சசன் படம் சிறந்த கிரைம் திரில்லர் படமாக பார்க்க நிலையில் போர் தொழில் அதனை சமம் செய்துள்ளது .
முதல் நாள் முதல் சிறந்த விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்று வரும் இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனை படைத்துள்ளது.அதிலும் குறிப்பாக இன்று விடுமுறை நாள் என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் உயரும் என எதிர்பார்க்கபாடகிறது .