தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அதிதி ஷங்கர். தமிழ் சினிமவில் புதுமையையும் பிரம்மாண்டத்தையும் ஒன்றிணைத்து படத்திற்கு படம் காட்சிக்கு காட்சி பிரம்மிக்க வைக்கும் இயக்குனர் ஷங்கரின் மகளான இவர் ஒரு டாக்டர் .
தந்தை போல் சினிமா மேல் உள்ள அளவற்ற காதலால் டாக்டர் பணியை விட்டுவிட்டு நடிக்க வந்துவிட்டார் .அந்தவகையில் கடந்த வருடம் கார்த்தியின் நடிப்பில் வெளியான விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் அதிதி.
முதல் படத்தில் நடிப்பது மட்டுமின்றி பாட்டு பாடியும் அசத்தியுள்ள நடிகை அதிதி ஷங்கர் ரசிகர்களின் மனதில் அசால்டாக இடம்பிடித்துவிட்டார் . இதையடுத்து குடம்பநாயகன் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்த அதிதி மாவீரன் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மண்டேலா இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கித்தில் உருவான இப்படம் நாளை மறுநாள் திரையரங்கில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில், தற்போது மாவீரன் கதாநாயகியாக நடித்துள்ள அதிதி ஷங்கர் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிக்க நடிகை அதிதி ஷங்கருக்கு 25 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.