Juniper tree : சீமைக்கருவேல மரங்களை அகற்ற ராக்கெட் ஏதும் வேண்டுமா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டமான கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் விவாதிக்கப்பட்டது அப்போது பேசிய நீதிபதிகள் கூறியதாவது :
.சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை. தமிழக அரசு கடமைக்காக வழக்கை நடத்துவது போல உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
வனப்பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் உள்ள சிரமத்தை புரிந்து கொள்ள முடிகிறது. சமதள பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் என்ன சிரமம் உள்ளது என தெரியவில்லை.
Also Read : https://itamiltv.com/there-is-no-chance-of-water-shortage-in-chennai/
ஒரு கிராமம் அல்லது ஒரு பஞ்சாயத்தில் கூட முழுமையாக சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படவில்லை. சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு ராக்கெட் தொழில்நுட்பம் தேவையில்லை.
சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் (Juniper tree) குறித்தும், 30 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது குறித்தும் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.