உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்ட உரிமையாளருக்காக ஆம்புலன்ஸின் பின் மூச்சிரைக்க ஓடிய வளர்ப்பு நாயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொலம்பியாவில் அலெஜாண்ட்ரோ என்பவருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அவரை தீவிர சிகிச்சைக்காக வில்லா டே லெய்வாவில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள டுன்ஞாவுக்கு அம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர் .
Also Read : கல்லூரி மாணவியை மது விருந்துக்கு அழைத்த பேராசிரியர் கைது..!!
அப்போது அலெஜாண்ட்ரோவின் நாய் ஓடிவருவதை ஒருவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு தெரிவிக்க, அது உரிமையாளருடன் இணைந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளது
தனது உரிமையாளர் அலெஜாண்ட்ரோ அழைத்துச் செல்லப்பட்ட ஆம்புலன்ஸ்க்கு பின்னால் மூச்சிரைக்க ஓடிய அந்த வளர்ப்பு நாயின் பாசப்போராட்டம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.