அலைப்பேசியில் ஹலோ என்று சொல்லாமல் ‘தாமரை வணக்கம்’ என சொல்லுங்கள் என (thamarai vanakkam) தமிழக பாஜக தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று தீவிர பரப்புரையில் ஈடுபட்ட அண்ணாமலை கூறியதாவது :
கோவை விமான நிலையம் தரம் உயர்த்தப்படும். கோவையில் N.I.A. கிளை திறக்கப்படும். கோவையில் 250 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்படும்.
கோவையில் இருந்து புராதனமான தலங்களுக்கு 10 ரயில்கள் இயக்கப்படும் என்பது உட்பட 100 வாக்குறுதிகளை கோவை தொகுதிக்கு பாஜக வெளியிட்டுள்ளது.
திமுக டெபாசிட் இழக்கக்கூடிய முதல் தொகுதி கோயம்புத்தூர்தான். தோல்வி பயத்தில் திமுக இருக்கிறது
கவுன்டிங் ஆரம்பித்த மூன்று நான்கு சுற்றுகளிலேயே திமுக டெபாசிட் வாங்காது என தெரிந்துவிடும். அந்த அளவுக்கு மக்களின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்
தமிழகத்தில் உளவுத்துறையால் பலரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகிறது.
பத்திரிகையாளர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. என்னுடைய குடும்பத்தினர், சொந்தங்கள் மற்றும் உடனிருப்பவர்களின் ஃபோன்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன.
ஒவ்வொரு உளவுத்துறை அதிகாரியும் இதற்கு பதில்சொல்ல வேண்டும். நிரந்தரமாக இந்த ஆட்சி
இருக்கப்போவதில்லை
கோவை மாநகரில் செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் (thamarai vanakkam) நிதி முறைகேடுகள் தொடர்பாக சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படும்; முறை கேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.