கேரளாவில் கொலை வழக்கில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த நபர், கொல்லப்பட்ட பெண்ணின் கணவர், மாமியாரை கொலை செய்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே பெண் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த செந்தாமரை என்ற நபர் , கொல்லப்பட்ட பெண்ணின் கணவர், மாமியாரை இன்று கொலை செய்து தப்பி ஓடியுள்ளார்.
2019 ஆண்டு சஜிதா என்பவரை கொலை செய்த செந்தாமரை சமீபத்தில் ஜாமினில் வெளியே வர, தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சஜிதாவின் கணவர் சுதாகரன் போலீசில் புகார் கூறியுள்ளார்.
Also Read : சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்பாரா பும்ரா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!
இதனை அடுத்து செந்தாமரையை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில், இன்று காலை சுதாகரன், அவரது தாயார் லக்ஷ்மி இருவரையும் கொலை செய்த செந்தாமரை அங்கிருந்து தப்பிஓடியுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீது பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கேரள போலீசார் கொலையாளி செந்தாமரையை தீவிரமாக தேடி வருகின்றனர்.