கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், இது தொடர்பான சந்தேகங்களை ( Local ePass ) போக்கிக்கொள்வதற்காக தொலைபேசி எண்களை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம். கொடைக்கானல் பகுதிக்கு வருகை தரும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் 07.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை இ-பாஸ்(ePass) பதிவு செய்து வர வேண்டும்.
பயணிகள் “epass.tnega.org” என்ற இணைய முகவரியில் விபரங்களை பதிவேற்றம் செய்து இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம். இ-பாஸ் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு இ-பாஸ் ( Local ePass ) பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு 0451 2900233 என்ற தொலைபேசி எண் 9442255737 என்ற கைபேசி எண் வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம். என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி மொ.நா.பூங்கொடி தெரிவித்துள்ளார்