தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டு அனுப்பபடும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்பதல் அளிக்காமல் காலம் தாழ்த்து வருவது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்த முடியாது.
அரசமைப்பு சாசனம் 200-வது பிரிவின் படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆளுநர்கள் ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்று கூறி ஆளுநரால் கிடப்பில் போடப்பட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
உச்சநீதிமன்றம் ஒப்புதலுடன் அமலுக்கு வந்த மசோதாக்கள் :
தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: துணைவேந்தர்கள் நியமன அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து முதல்வருக்கு மாற்றிட வழிவகை.
சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன அதிகாரத்தை மாற்றிட வழிவகை.
பெரியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: பெரியார் பல்கலைக்கழக நிர்வாக அமைப்பில் மாற்றங்களை கொண்டுவர வழிவகை.
அண்ணா பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் நியமன அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கிட வழிவகை.
தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: மருத்துவ பல்கலைக்கழக நிர்வாக மாற்றங்களை ஏற்படுத்திட வழிவகை.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் மாற்றம் செய்ய வழிவகை.
Also Read : நடுத்தர குடும்பத்திற்கு ஷாக் – வீடு உபயோக சிலிண்டர் விலை அதிரடி உயர்வு..!!
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: திறந்தநிலை பல்கலைக்கழக நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் கொண்டுவர வழிவகை.
தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: சட்டப் பல்கலைக்கழக துணைவேந்த நியமன அதிகாரத்தை முதல்வருக்கு வழங்க வழிவகை.
தமிழ்நாடு தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: தொழில்நுட்ப பல்கலைக்கழக நிர்வாக அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த வழிவகை.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: வேளாண் பல்கலை. துணைவேந்தர் நியமன அதிகாரத்தை முதல்வருக்கு வழங்க வழிவகை.