குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று மாலை பெங்களூருவிலிருந்து இந்திய விமானப்படையின் தனி விமானம் மூலம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு வருகை தர உள்ளார்.
சரியாக இன்று மாலை 6.50 மணிக்கு சென்னை பழையவிமான நிலையத்திற்கு வரும் குடியரசுத் தலைவரை ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரவேற்க உள்ளனர்.
இதையடுத்து சாலை மார்க்கமாக ஆளுநர் மாளிகை செல்லும் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பின்னர் சென்னை அடுத்த உத்தண்டியில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
விழாவை முடித்து ஓய்வெடுக்கும் குடியரசுத்தலைவர் நாளை மதியம் 12.05மணிக்கு விமானப்படையின் தனி விமானம் மூலமாக புதுடெல்லிக்குப் புறப்படுகிறார்.
குடியரசு தலைவரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுமார் 1000 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.