கஞ்சா போதையில் நாயைக் கொன்ற கொடூரன் – வீடியோ வெளியானதால் கைது – சிறையில் அடைப்பு
Tirupur : திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கஞ்சா போதையில் நாயின் கால்களை கட்டி, கட்டையால் அடித்துக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவிநாசியை அடுத்த வேலாயுதம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தஸ்தகீர். மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான தஸ்தகீர் எந்த வேலைக்கும் செல்லாமல் சும்மா சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்!!
சம்பவத்தன்று கஞ்சா மற்றும் மதுபோதையில் இருந்த தஸ்தகீர், அப்பகுதியில் இருந்த தெருநாய் ஒன்றைப் பிடித்து தொந்தரவு செய்துள்ளார். இதனால் அந்த தெருநாய் தஸ்தகீரை கடித்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர், நாயின் பின்னங்கால்களை கயிற்றால் கட்டி, கட்டையால் கடுமையாகத் தாக்கி உள்ளார்.

அப்போது வலி தாங்காமல் நாய் அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தடுக்க முயன்றுள்ளனர். நாய் தன்னை கடித்ததால், அடிப்பதாகக் கூறி தொடர்ந்து தாக்கியதில் நாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இந்த நிகழ்வை அவ்வழியே சென்ற ஒருவர் பார்த்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்ட நிலையில், அதனைப் பார்த்த மதுரையை சேர்ந்த காளீஸ்வரி என்பவர், ஆன்லைன் மூலமாக அவிநாசி காவல்நிலையத்துக்கு புகார் அளித்துள்ளார்.
புகாரின் மீது விசாரணை நடத்திய Tirupur அவிநாசி போலீசார், கஞ்சா மற்றும் மது போதையில் நாயைக் கொடூரமாக அடித்துக் கொன்ற தஸ்தகீரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க : ஆசிர்வதிக்கப்பட்ட பெருநாள் `புனித வெள்ளி’ – பாஜக அண்ணாமலை