போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தாய் தந்தையின் மகத்துவத்தை பற்றி நடிகர் தாமு பேசியதைக் கேட்டு பெண் காவலர் ஒருவர் கதறி அழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் காவல்துறையினர் சார்பில் போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும்’ என்ற தலைப்பில் ஐ.சி.எப் அம்பேத்கர் மன்றத்தில் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆறு அரசு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1200 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட நடிகர் தாமு பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தீமைகள் குறித்தும், அதனைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் தாமு எடுத்துரைத்தார்.
மேலும் சமீபகாலமாக நடிகர்கர்களின் திரைப்படங்கள் வெளியானால் அவர்களின் திருவுருவ படத்திற்கு பாலூற்றுவது,பேருந்துகளின் மீது ஏறி நடனம் ஆடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு இளைஞர்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர்.
அவரின் பேச்சைக் கேட்ட ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட பலரும் கண் கலங்கினர். குறிப்பாக அங்கு பாதுகாப்பில் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் தாமுவின் பேச்சை கேட்டு தேம்பி தேம்பி அழுதார். இதைப் பார்த்த தாமு உள்பட பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.