drugs case | போதைப் பொருள் விற்பனையில் பா.ஜ.க. தலைவர்கள் பட்டியல் என்னிடத்தில் இருக்கிறது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று (04-03-2024) செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர் “தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளது போல, எடப்பாடி பழனிசாமி பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஆனால் தங்களது கூட்டணிப் பிரச்சினைகளைக் கையாள முடியாமல், யார் வருவார் எனக் காத்திருக்கும் அவர், தி.மு.க. மீது அவதூறுகளைப் பேசி வருகிறார்.தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதியா..? அந்த 4 தொகுதிகள் இதுதானாம்..!
இந்த செய்தியை தாங்கிக் கொள்ள முடியாத எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். மேலும் தமிழ்நாடு நாட்டிலேயே, முதன்மை மாநிலமாகத் திகழ்வதை அவர்களால் ஏற்க முடியவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் தான் போதைப் பொருள் அதிகமாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த ஆர் எஸ் பாரதி,”அண்ணாமலை ஏதோ தமிழ்நாட்டில்தான் போதைப் பொருள் அதிகம் இருப்பது போல பேசுகிறார். இந்தியாவிலேயே அதிகமான போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட மாநிலம் குஜராத்.
அதானிக்குச் சொந்தமான துறைமுகத்தில் தான் இந்தியாவினுடைய மொத்த போதைப் பொருள் கடத்தலும் நடக்கிறது என்று அனைத்துத் தரப்பினரும் கூறுகிறார்கள். இந்தியா முழுக்கப் போதைப் பொருள் பரவலுக்குக் காரணம் பாஜ.க.தான் என்று தெரிவித்தார்.
போதைப் பொருள் விற்பனையில் பா.ஜ.க. தலைவர்கள் பட்டியல் என்னிடத்தில் இருக்கிறது. பஞ்சாப் – ஷோன்தி 12 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். அவரை அமித்ஷா கட்சியில் சேர்க்கிறார்.
அதே போல பா.ஜ.க. எம்.பி.,யின்(drugs case) மகன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு இருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இப்படியிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என்று தெரிவித்தார்.